இந்தியா

1.வேட்பு மனுதாக்கலின்போது வாழ்க்கை துணைவருக்கு கிடைக்கும் வருமானம் தொடர்பான ஆதாரத்தையும் பிரமாண பத்திரத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என தேர்தல் கமிஷன் புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ.3,200 கோடி கடன் வழங்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.மேலும் இரு நாடுகளுக்கிடையே கடல்சார் பாதுகாப்பு உட்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்புக்கு பின் இரு நாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
3.உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்ஷா கோபால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.


உலகம்

1.அமெரிக்க ராணுவம் புதிதாக உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை தயாரித்துள்ளது.இதற்கு போயிங் எக்ஸ்.எஸ்.1 என பெயரிட்டுள்ளனர்.அமெரிக்க ராணுவத்துக்காக பான்டம் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது.


விளையாட்டு

1.ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச சேட்லைட் உலகக்கோப்பை வாள்வீச்சில் ‘சேபர்’ பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.இவர் இறுதிப்போட்டியில் 15-13 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம்சனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் உலக அளவில் வாள் வீச்சில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.கோவா தனி மாநிலமாகிய நாள் 30 மே 1987.

 

– தென்னகம்.காம் செய்தி குழு