இந்தியா

1.பணிபுரியும் பெண்களுக்கு பிரசவகால விடுப்பை 26 வாரங்களாக அதிகரித்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.பெண்களுக்கு அதிக நாள் பிரசவகால விடுப்பு அளிப்பதில் கனடா (50 வாரங்கள்) முதல் இடத்தையும்,நார்வே (44 வாரங்கள்) இரண்டாவது இடத்தையும்,மூன்றாவது இடத்தை இந்தியாவும் (26) பிடித்துள்ளன.
2.பொது மக்கள் வருடத்திற்கு ரூபாய் 15,000 கொடுத்து பசுவை தத்தெடுத்து வளர்க்கலாம் என ராஜஸ்தான் அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
3.கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விண்ணப்பத்தை இணையதளத்தில் வெளியிட்ட தனியார் நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்து ஆதார் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.பெண்ணிடம் முறைகேடாக பேசியதாக எழுந்த புகாரை அடுத்து பதவி விலகிய கேரளா அமைச்சர் சசீந்திரன் மீதான விசாரணையை விசாரிக்க ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பி.எஸ். அந்தோணி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது.
5.ஏப்ரல் – 01 முதல் இந்தியாவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் BS – 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


உலகம்

1.கம்போடியாவில் ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஏப்ரல் 03 முதல் ஏப்ரல் 12 வரை 5வது ஆசிய பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி போபாலில் நடைபெறவுள்ளது.
2.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தியோதர் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ‘பி’ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.அறுவை சிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்ட நாள் 30 மார்ச் 1842.
2.அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்ட நாள் 30 மார்ச் 1858.

 

தென்னகம்.காம் செய்தி குழு