இந்தியா

1.புத்தாண்டு, பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வந்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி ஒரு மாதம் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.மத்திய உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளது.
2.மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா உடல்நலக் குறைபாடு காரணமாக போபாலில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலை காலமானார்.அவருக்கு வயது 92.
3.தில்லியின் புதிய துணைநிலை ஆளுநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மத்திய முன்னாள் உள்துறைச் செயலாளருமான அனில் பய்ஜால் (70), கடந்த டிசம்பர் 28-ம் நியமிக்கப்பட்டுள்ளார்.
4.அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிதித் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ள விரால் வி. ஆச்சார்யாவை (42), ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
5.மலேரியா நோயை கட்டுப்படுத்த ஒடிஷா மாநில அரசு “தமன்”(Durgama Anchalare Malaria Nirakaran) என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
6.பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்பால் வழங்குவதை ஊக்குவிக்கவும், கடைகளில் விற்கப்படும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதை தடுக்கவும் , அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு Stanpan Suraksha எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.


உலகம்

1.உலகிலேயே மிக நீளமான புல்லட் ரயில் வழித்தடம் கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல்  சீனாவில் உள்ள வளமிக்க கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள ஷாங்காய், வளர்ச்சி குறைந்த தென்மேற்குப் பகுதியிலுள்ள கன்மிங் ஆகிய நகரங்களை இணைக்கும் 2,252 கி.மீ. தொலைவுக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இந்த புல்லட் ரயில்  மணிக்கு 330 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
2.சீனா கடந்த டிசம்பர் 28-ம் தேதி டையூவான் செயற்கைக்கோள் செலுத்தும் மையத்திலிருந்து தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும் “லாங் மார்ச் 2டி’ ஏவுகணையை வெற்றிகரமாக  விண்ணுக்கு செலுத்தியது.இந்தச் செயற்கைக்கோள்கள் அதிக தெளிவான (0.5 மீட்டர் தெளிவில்) புகைப்படங்களை விண்ணிலிருந்து எடுத்து அனுப்பும் திறன் வாய்ந்தது.
3.ஆபத்து காலங்களில் நமது இருப்பிடத்தை நம்பகமான நபர்களுக்கு தெரிவிக்க உதவும் வகையிலான அலைபேசி செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவன அலைபேசி செயலியில்(Android Play Store) Trusted Contacts என டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விளையாட்டு

1.தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனா அணி, ஜப்பான் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.மூன்றாவது இடத்தை இந்திய அணி பிடித்துள்ளது.
2.போர்ட் எலிசபத் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளன்று தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது.இதில் அந்த அணியின் ஹஷிம் ஆம்லா, 48 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் பந்தில் நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000மாவது எல்.பி.அவுட் ஆகும். நுவான் பிரதீப்பும் ஹஷிம் ஆம்லாவும் புள்ளிவிவரப்பட்டியலில் இதன் மூலம் இடம்பெற்றனர்.


இன்றைய தினம்

1.ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் 30 டிசம்பர் 2006.
2.அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 1906.
3.மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகிய நாள் 30 டிசம்பர் 1941.
4.சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றிய நாள் 30 டிசம்பர் 1943.
5.உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்ட நாள்  30 டிசம்பர் 1953.

 

– தென்னகம்.காம் செய்தி குழு