தமிழகம்

1.மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் R. சிதம்பரத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.


இந்தியா

1.புவி அறிவியல் துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருது பேராசிரியர். K. கோபாலன்க்கு வழங்கப்பட்டுள்ளது.
2.நாட்டிலேயே முதலாவதாக மும்பை மெட்ரோ ரயில், மொபைல் டிக்கெட் முறை OnGo என்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது.மும்பை மெட்ரோ செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், நமது மொபைலுக்கு qr கோடு வந்து சேரும். இதனை கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள ஆளில்லா டிக்கெட் பரிசோதனை வாயில் வழியே செல்லலாம்.
3.மத்திய புவி அறிவியல் துறை நிலநடுக்கம் பற்றிய தகவல்களை அறிய India Quake என்ற செயலி மற்றும்
சுனாமி போன்ற கடற்சீற்றங்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை அறிய Sagar Vani என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த இரு செயலியும் National Centre for Seismology (NCS) அமைப்பு உருவாக்கியுள்ளது.


உலகம்

1.கூகுள் நிறுவனம், பெருநிறுவனங்களின் காலி பணியிடங்களில் பணிபுரிய விண்ணப்பிக்கும் பணியாளர்களில் தகுதியானவரை தேர்வு செய்ய உதவும் வகையில் Hire என்ற செயலியை வெளியிட்டுள்ளது.
2.வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கைசாலா (Kaizala) மற்றும் Made For India என்னும் மெசேஜ் அனுப்பும் செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
3.ஊழல் செய்து வெளிநாட்டில் சொத்து குவித்ததாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ அம்பலப்படுத்தியது தொடர்பான வழக்கை விசாரித்த, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, தகுதி நீக்கம் செய்து தீர்ப்பளித்துள்ளது.இதுவரை 3 முறை பிரதமர் பதவியை வகித்த நவாஸ் ஷெரீப் , ஒருமுறை கூட முழுமையாக பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை.


விளையாட்டு

1.துருக்கியின் Samsun நகரில் நடைபெற்ற காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான கோல்ப் போட்டியான Deaflympics போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி Diksha Dagar , தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் (World Day Against Trafficking in Persons).
ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்திட ஐ.நா.வின் 68ஆம் பொதுச்சபை, மூன்றாவது குழுவின் 46 ஆவது கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை கொண்டாடுமாறு அறிவித்தது.
2.இன்று சர்வதேச நட்பு தினம் (International Day of Friendship).
அழகு, அறிவு, அந்தஸ்து, பணம், பதவி, ஜாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற வேறுபாடுகளைக் கடந்து உள்ளத்தை மட்டுமே நேசிக்கும் உயரிய பண்பு கொண்டது நட்பு. இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை ஏப்ரல் 2011இல் இத்தினத்தை அறிவித்தது.
3.1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு