current-affairs

தமிழகம்

1. ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் நீர் மற்றும் காற்றழுத்தம் மூலம் இயங்கக்கூடிய ராக்கெட் போன்ற பொருளை தயாரித்து பிளஸ் 1 மாணவர் தியான் அர்ஷத் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா

1.இன்று மாமனார் தினம்(HAPPY FATHER-IN-LAW-DAY).
2.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதியை சி.பி.எஸ்.இ., தலைவராக, மத்திய அரசு நியமித்துள்ளது.
3.மஹாராஷ்டிராவின் கோயில் நகரமான சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூர் எனப்படும்  பண்டரிபுரத்தில், உலகின் மிகப்பெரிய கழிப்பறை வளாகம் உருவாகிவருகிறது.
4.இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ‘தேஜஸ்’ போர் விமானம் விமானப் படையில் இணைந்தது.

உலகம்

1.இன்று ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்(World Day Against Trafficking in Persons).ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்திட ஐ.நா.வின் 68ஆம் பொதுச்சபை, மூன்றாவது குழுவின் 46 ஆவது கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கொண்டாடுமாறு அறிவித்தது.
2.சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 75வது இடத்தில் உள்ளது.கடந்த வருடம் இந்தப் பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.