இந்தியா

1.01 ஜனவரி 2018 முதல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார்.
2.மகாராஷ்டிரா மாநில அரசு புதிதாக நடப்படும் மரங்கள் பற்றிய தரவுகளை உருவாக்க My Plant என்ற செயலியை ஜூலை 1 முதல் அறிமுகம் செய்கிறது.
3.சர்வதேச பொருளாதார சங்கத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த கவுசிக் பாசு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் 2009 -2012ல் இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
4.இந்தியாவின் மிக முக்கியமான கலாச்சார அமைப்பான India International Centre-ன் தலைவராக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநர் நரிந்தர் நாத் வோரா நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் இப்பதவியில் சொலி சொராப்ஜி இருந்து வந்தார்.
5.வேளாண் பொருட்களுக்கான உரிய விலையை நிர்ணயம் செய்வதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்கு மத்திய பிரதேச அரசு வேளாண் ஆணையத்தை நிறுவியுள்ளது.ஆணைய தலைவரின் பதவி காலம் 2 ஆண்டுகளாகும்.
6.இந்தியாவிலேயே முதலாவதாக புனே மாநாகராட்சி கடன் பத்திரங்களை வெளியிட்டு Rs.200 கோடி திரட்டியுள்ளது.ஸ்மார்ட் நகரங்கள் திட்ட பணிக்காக 7.59% வட்டி விகிதத்தில் மும்பை பங்குச் சந்தை மூலமாக இந்த பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
7.திறன் இந்தியா (Skill India) திட்ட பிரச்சார தூதுவராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.பாரிஸ் பருவநிலை ஒப்பந்தப்படி கரியமில வாயுவின் அளவை கட்டுப்படுத்தாவிடில், உலகில் உள்ள பவளப்பாறைகள் அனைத்தும் 2100ம் ஆண்டுக்குள் அழிந்துவிடும் என யுனெஸ்கோ அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.


இன்றைய தினம்

1.1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.
3.1997 – முதலாவது ஹரி பாட்டர் நூல் வெளியிடப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு