current-affairs

இந்தியா

1.இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து இந்தியா தயாரித்த, தரையிலிருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணை ஏவப்பட்டது.இன்று வெற்றிகரமாக இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டது.
2.7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.ஆரம்பநிலை சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது.

உலகம்

1.முதலாவது ஹாரிபாட்டர் நூல் வெளியிடப்பட்ட நாள் 30 ஜுன் 1997.
2.உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 30 ஜுன் 1937.
3.இன்று அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 30 ஜுன் 1966.