current2

தமிழகம்

1.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு  புதிதாக 15 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்த்திபன், சுப்பிரமணியன், கோவிந்தராஜ், சுந்தர், சுரேஷ்குமார், நிஷாபானு, பாஸ்கரன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், ரமேஷ், கார்த்திகேயன், எஸ்.எம்.சுப்பிரமணியன், அனிதா, சமந்தா, பஷீர் அகமது மற்றும் ரவீந்திரன் அகியோர் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
2.தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2003.

இந்தியா

1.மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது.
2.பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் வாகா பகுதியில் வழக்கமாக நடைபெறும் கொடி மரியாதையை இந்தியா ரத்து செய்துள்ளது.
3.அமெரிக்காவில் உள்ள “நவீன உலக சுகாதாரம்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுள்ளது.இந்தியாவில் பணக்கார நகரமாக மும்பையை தேர்வு செய்துள்ளது.மும்பைக்கு அடுத்து பணக்கார நகரமாக தில்லியை தேர்வு செய்துள்ளது.அடுத்து பெங்களூரு நகரம் மூன்றாவது இடத்திலும்,ஹைதராபாத் நகரம் நான்காவது இடத்திலும்,கொல்கத்தா நகரம் ஐந்தாவது  இடத்திலும்,புணே நகரம் ஆறாவது இடத்திலும்,சென்னை நகரம் ஏழாவது இடத்திலும் உள்ளன.

உலகம்

1.இஸ்ரேலின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும்,முன்னாள் பிரதமருமான சிமோன் பெரோஸ் கடந்த  செப்டம்பர் 28ம் தேதி காலையில் மரணமடைந்தார்.இவருக்கு 1994-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்துடனான நட்புறவு வளர்க்க எடுத்த முயற்சிகளின் காரணமாக, அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
2.உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடைபாதை பாலம் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ மலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 20-ல் திறக்கப்பட்டது.ஆனால் திறக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே இந்த பாலம் மூடப்பட்டது.மீண்டும் இன்று  திறக்கப்பட உள்ளது.

வர்த்தகம்

1.அமேசான் டான் இன் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை, கோவை என இரண்டு இடங்களில் பொருட்களை இருப்புவைக்கும் மையங்களை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்தியாவில் அமேசான் டாட் இன் நிறுவனத்திற்க்கு இந்தப் புதிய மையங்களையும் சேர்த்து 27 மையங்கள் உள்ளன.

விளையாட்டு

1.ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3-ஆவது இடத்திலிருந்து 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்தில் அஸ்வின் உள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

5.இன்று கரூர் மாவட்டம்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.கரூர்,குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர் மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.
அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம். இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம், மாவட்டத் தலைநகரான் கரூர் ஆகும். கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.
வடக்கில் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும் குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.