தமிழகம்

1.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருது, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


இந்தியா

1.ஒரிசா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களான பூரி மற்றும் கோனாரக் இடையே  புதிய ரெயில் வழித்தடத்திற்கு டுவிட்டர் மூலம் அம்மாநில முதல்வர் வைத்த கோரிக்கைக்கு 3 நிமிடங்களில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2.குஜராத்தில் உள்ள GIFT Cityயில் ( Gujarat International Finance Tec City – GIFT City ), பெல்ஜியம் நாடு தனது கவுரவ துணை தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.
3.பிரபல ஹிந்தி பின்னணி பாடகி லதா மங்கேஸ்கரின் தந்தை தீனாநாத் மங்கேஷ்கரின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட “விசேஷ் புரஸ்கார்” விருதுகள் நடிகர் ஆமீர் கான், கபில் தேவ் , நடிகையும் முன்னாள் MPயும்மான வைஜெந்திமாலா பாலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
4.ஒடிஷாவை சேர்ந்த புகழ் பெற்ற மணல் சிற்பக்கலைஞரும், மணல் சிற்பத்தில் கின்னஸ் சாதனை புரிந்தவருமான சுதர்சன் பட்நாயக், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மணல் சிற்பத்திற்கான சாம்பியன்ஷிப் போட்டியில் , விநாயகர் படத்துடன் பசுமையை வலியுறுத்தி வடித்த மணல் சிற்பத்திற்காக தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
5.வீரப்ப மொய்லி The Flaming Tresses of Draupadi என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.


உலகம்

1.ஜெர்மனியின் பெர்லின் நகரில் G 20 நாடுகளின் பெண் தலைவர்கள் கலந்து கொண்ட Women20 summit  நடைபெற்றது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச ஜாஸ் தினம் (International Jazz Day).
ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது. ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.
2.ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியான நாள் 30 ஏப்ரல் 1900.
3.திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 1982.

 

– தென்னகம்.காம் செய்தி குழு