Current-Affairs-Updates

தமிழகம்

1.மின்னணு வாழ்வுச் சான்றிதழை இணைய சேவை மையங்களில் பெறுவதற்கு பான் அட்டை எண் அவசியம் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2.தமிழகத்தில் மூன்று தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சியான அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் சென்னை தலைமை செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தியா

1.ராணுவ நடவடிக்கைகளுக்கான புதிய இயக்குநர் ஜெனரலாக ஏ.கே.பாட் நியமிக்கப்பட்டுள்ளார். எல்லை நடவடிக்கைகளையும் இவரே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2.ஃபவுண்டரிஸ் வளர்ச்சி நிறுவன தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன் தென் மண்டல தொழில் பழகுநர் வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.
3.இந்தியாவிலேயே முதன்மையாக சைக்கிள் மட்டும் செல்வதற்கான நெடுஞ்சாலை  உ.பி.யில் எடாவா நகர் முதல் ஆக்ரா வரை 207 கி.மீ. தூரத்திற்கு 7அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
4.இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்ற பழமையான ஜீப்களின் அணிவகுப்பு மணிப்பூர் மாநிலம் Koirengeiல் நடைபெற்றது.இவற்றோடு பைக்குகளும் கலந்து கொண்டுள்ளன.
5.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.சுடிதார், சல்வார் கமீஸ் ஆகிய தளர்வான ஆடைகளை அணிந்து வருவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

உலகம்

1.தாய்லாந்தின் மன்னராக இருந்த பூமிபால் அதுல்யதேஜ், தனது 88-ஆம் வயதில் அக்டோபர் 13-ஆம் தேதியன்று  மரணமடைந்ததைத் தொடர்ந்து புதிய மன்னராக பட்டத்து இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்ன் பதவியேற்றுக் கொண்டதாக அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
2.கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று வட கொரியா அறிவித்துள்ளது.

வர்த்தகம்

1.100 கிராமங்களை மின்னணுப் பணப்பரிமாற்ற சேவையில் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

விளையாட்டு

1.மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 84 வருட கால வரலாற்றில் முதல் முறையாக இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை படைத்துள்ளனர்.7, 8, 9 ஆகிய நிலைகளில் ஆடிய மூன்று இந்திய பேட்ஸ்மேன்களும் ஒரே இன்னிங்ஸில் அரை சதம் எடுத்துள்ளனர்.உலக அளவில் 7-வது முறையாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
2.இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானுக்குப் பதிலாக மலேசியா சேர்க்கப்பட்டுள்ளது .பாகிஸ்தான் அணிக்கு விசா மற்றம் பாதுகாப்பு பிரச்சினையால் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதால் மலேசியா அணி சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.வளைகுடாப் போர் முடிவுக்கு வந்த நாள் 30 நவம்பர் 1995.
2.இந்தியாவின் 15-வது பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைந்த தினம்.இவர் மறைந்த தேதி 30 நவம்பர் 2012.