current3

தமிழகம்

1.வான் வெளியில் குட்டிக் கரணம் அடிக்கும் சாகச விளையாட்டில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வீரர் பி.ராஜ்குமாருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2.தமிழக அமைச்சரவையில் பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.பால்வளத் துறை அமைச்சர் பொறுப்பு கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.ஹரியாணா மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ பவன்குமார் சைனி (45),தனது கட்சித் தொண்டர்கள் 10 பேருடன், 110 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்தபடி சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.
2.உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மகாலை மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் தனது மனைவி டா சூ சூ லிவினுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தார்.பின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

உலகம்

1.இன்று  சர்வதேச காணாமற் போனோர் தினம்(International Day of Disappeared).

உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  கொஸ்டாரிக்காவில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.ரகசியக் கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன போராடுகின்றன.இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.
2.உலகின் முதல் சுய ஓட்டுநர் டாக்ஸி சேவையை சிங்கப்பூரைச் சார்ந்த nuTonomy எனப்படும்  தன்னாட்சி வாகன சாஃப்ட்வேர் நிறுவனம் துவங்கியுள்ளது.இந்நிறுவனம் 6 சிறிய கார்களை  கொண்டு தன் சேவையை  தொடங்கியுள்ளது.