Current-Affair-Logo

தமிழகம்

1.தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான(FORM-B) படிவத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார்.

இந்தியா

1.ஹரியானா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) நிறுவனத்தின் டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2.பெண்களின் வேதனையை போக்கும் நோக்கில், 2017 ஜனவரி 1 முதல் அனைத்து செல்போன்களில் `அபாய பட்டன்’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
3.மகாராஷ்டிரா முன்னாள் ஆளுநர் சுப்பிரமணியத்தின் மனைவி சகுந்தலா (94),  ஈரோட்டில் நேற்று  காலமானார்.

உலகம்

1.ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக தீபாவளி பண்டிகை நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டதாக ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பரூதின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.