தமிழகம்

1.தமிழகத்தில் முதல்முறையாக,பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வுசெய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேர் காணல் நடத்தியுள்ளார்.இந்த நேர்காணல் ராஜ்பவனில் நடைபெற்றது.


இந்தியா

1.சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கியவரும், சிறந்த போலீஸ் அதிகாரி என்று பாராட்டு பெற்றவருமான பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் தலைநகர் புதுடெல்லியில் கடந்த மே 26-ஆம் தேதி காலமானார்.
2.நாடு முழுவதும் எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.


உலகம்

1.இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் லண்டனில் வாழும் ஹைதராபாத் பெண் ராகசுதா விஞ்சாமுரி, 7 முறை இந்தியப் பாரம்பரிய நடனத்தை ஆடி புதிய சாதனை புரிந்துள்ளார்.
2.ஐ.நா.வின் மக்கள் வாழ்விடம் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎப்) வெளியிட்டுள்ள உலகின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் வங்கதேச தலைநகர் டாக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது(இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 44,500 பேர் வசிக்கின்றனர்).மும்பை  இரண்டாவது இடத்தையும் (இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 31,700 பேர் வசிக்கின்றனர்),கொலம்பியாவின் மெடலின் நகரம் மூன்றாவது இடத்தையும்(இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 19,700 பேர் வசிக்கின்றனர்),பிலிப்பைன்சின் மணிலா நகரம் நான்காவது இடத்தையும் (இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 14,800 பேர் வசிக்கின்றனர்),கசபிளாங்காவின் மொராக்கோ நகரம் ஐந்தாவது இடத்தையும் (இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 14,200 பேர் வசிக்கின்றனர்),நைஜீரியாவின் லாகோஸ் நகரம் ஆறாவது இடத்தையும் (இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 13,300 பேர் வசிக்கின்றனர்),ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரம் ஏழாவது இடத்தையும் (இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 12,200 பேர் வசிக்கின்றனர்),சிங்கப்பூர் எட்டாவது இடத்தையும் (இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 10,200 பேர் வசிக்கின்றனர்),இந்தோனேசியாவின் ஜாகர்த்தா ஒன்பதாவது இடத்தையும் (இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 9,600 பேர் வசிக்கின்றனர்) பிடித்துள்ளன.
3.அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல் தாப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவரது நியமனத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.


இன்றைய தினம்

1.ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of UN Peacekeepers).

யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2.பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்ட நாள் 29 மே 1869.
3.இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்ட நாள் 29 மே 1947.
4.முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த நாள் 29 மே 1953.
5.இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாள் 29 மே 1982.
6.டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்த நாள் 29 மே 1999.

 

– தென்னகம்.காம் செய்தி குழு