இந்தியா

1.பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல்(85), நேற்று காலை லூதியானாவில் காலமானார்.
2.“மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றால் குற்றம் ஆகாது” என்பது குறித்து பாராளுமன்றத்தில் மனநல சுகாதார பாதுகாப்பு மசோதா நிறைவேறியுள்ளது.


உலகம்

1.ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியாக சீன ஆதரவாளர் கேரி லாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியாக ஒரு பெண் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.


விளையாட்டு

1.டெஸ்ட் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறதோ, அந்த அணிக்கு ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன் எனும் அந்தஸ்து மற்றும் கதாயுதம் பரிசாக வழங்கப்படும்.அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணிக்கு 1 மில்லியன் டாலர்களுக்கான காசோலை மற்றும் கதாயுதத்தை கவஸ்கரால், கேப்டன் விராட் கோலியிடம் வழங்கப்பட்டுள்ளது.
2.நடுவரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக, பார்சிலோனா வீரர் மெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.இவர் தற்போது அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடி  வருவது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அடைந்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்ற நாள் 29 மார்ச் 1974.

 

– தென்னகம்.காம் செய்தி குழு