Current-Affair-Logo

தமிழகம்

1.ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் கார்களை சென்னைத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்து சாதனை அளவினை எட்டியது.இதையடுத்து கப்பல் தள வாடகை கட்டணத்தில் (Wharfage Charges) ரூ. 19.70 கோடியை துறைமுக நிர்வாகம் புதன்கிழமை திருப்பியளித்தது.

இந்தியா

1.இமயமலையில் உள்ள துரோனகிரி பகுதியில் சஞ்சீவினி மூலிகையை கண்டுபடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.ஆகஸ்ட் முதல் சஞ்சீவினி மூலிகையை தேடும் பணி துவக்கப்படும் என அறிவித்துள்ளது.
2.ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டலின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.வரும் 2018-ஆம் ஆண்டு வரை ரயில்வே வாரியத்தின் தலைவராக அவர் நீடிப்பார்.
3.பிரபல வங்க மொழி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி (91) உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் நேற்று  காலமானார்.

உலகம்

1.இன்று சர்வதேச புலிகள் தினம்(International Tiger’s Day).உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலி மட்டுமே. புலியின் எண்ணிக்கை உலகளவில் வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. புலிகள் பாதுகாப்பு மாநாடு ஜெயின்ட், பீட்டர்ஸ்பர்க் நகரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச புலிகள் தினத்தை அறிவித்தது.