இந்தியா

1.புதிய தேசிய கல்விக் கொள்கையை வரையறுக்க முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.


உலகம்

1.ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் விருதை இந்தியாவின் வேளாண் நுண்ணுயிர் விஞ்ஞானி டாக்டர். ஶ்ரீஹரி சந்திரஹட்கி (Dr. Shrihari Chandraghatgi) பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.மங்கோலியாவில் நடந்த உலான்பாதர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அன்குஷ் தாஹியா, கொரியாவின் சோய் சோல்-ஐ வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
2.ஹாலே ஓபன் டென்னிஸ் (ஜெர்மனி) தொடரின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்-ஐ 6-1, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்து 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
3.இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை கவிதா தேவி , World Wrestling Entertainment (WWE) போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
4.உலகின் மிக கடுமையான சைக்கிள் போட்டி என கருதப்படும் Race Across America போட்டியில், 4,900 கிலோ மீட்டர் தூரத்தை 11 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் கடந்து இந்தியாவின் ஸ்ரீனிவாஸ் கோகுல்நாத் ஏழாவது இடத்தை பிடித்தார்.கோகுல்நாத்தை தொடர்ந்து வந்த மற்றொரு இந்தியர் டாக்டர் அமீத் சமார்த்தும் இந்த தூரத்தை வெற்றிகரமாக முடித்தார். இவருக்கு 8வது இடம் கிடைத்தது.இப்போட்டியின் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் 3 இந்தியர்களே இதில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் எவரும் போட்டியை முடிக்கவில்லை


இன்றைய தினம்

1.1975 – ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் கணினியை சோதித்தார்.
2.2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு