இந்தியா

1.இறைச்சிக்காக கால்நடைகளை அடித்து கொல்லப்படுவதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.பொது நல வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.


உலகம்

1.இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் சாரா ஜேன் ஜங்ஸ்ட்ரம் (35), தன்னுடைய பிரசவத்தை பேஸ்புக்கில் ‘லைவ் வீடியோ’ வசதி வழியாக பகிர்ந்துள்ளார்.மேலும் தனது பெண் குழந்தைக்கு ஈவ்லின் என்று பெயரிட்டுள்ளார்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்  பெண்களுக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் தோற்கடித்து 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.மேலும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் 2017-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராகும்.
2.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார்.
3.ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதிகம் பட்டம் வென்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்டெபி கிராபை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார். செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றிய 23-வது கிராண்ட்சிலாம் (ஆஸ்திரேலிய ஓபன் 7, பிரெஞ்சு ஓபன் 3, விம்பிள்டன் 7, அமெரிக்கா ஓபன் 6) பட்டம் இதுவாகும்.இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்க்ரெட் கோர்ட் 24 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலியா ஓபன் 11, பிரெஞ்சு ஓபன் 5, விம்பிள்டன் 3, அமெரிக்கா ஓபன் 5) முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
4.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்  கலப்பு இரட்டையர் பிரிவு  இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ்-கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் ஜோடி  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த ஜோடி தன்னை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் சானியா மிர்ஸா-குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடியை 6-2,6-4  என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.இன்று உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம் (World Lebrosy Eraication Day).
தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். தொழுநோயாளிகள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள் மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை 2006ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
2.ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறிய நாள் 29 ஜனவரி 1595.
3.கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்த நாள் 29 ஜனவரி 1861.
4.ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்ட நாள் 29 ஜனவரி 1946.

 

– தென்னகம்.காம் செய்தி குழு