current_affairs

தமிழகம்

1.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் பொது துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகையாக  வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.மின்துறை, போக்குவரத்துறை, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு போனஸ் 20 சதவீதமும்,வீட்டு வசதித்துறை, சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் கழக ஊழியர்களுக்கு போனஸ் 10 சதவீதமும்,குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ்  வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா

1.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறுவதாக இருந்த சார்க் நாடுகள் மாநாடு இந்தியா, வங்கதேசம், பூடான், ஆப்கன் ஆகிய நாடுகள் விலகியதையடுத்து ரத்து செய்யப்பட்டதாக காத்மண்டுவின் மூத்த அதிகார வட்டாரங்கள் நாளிதழுக்குக் கூறியுள்ளன.முன்னதாக யூரியில் நடந்த தாக்குதல்கள் காரணமாக இந்தியா சார்க் நாடுகள் மாநாட்டில்  கலந்து கொள்ளாது என வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 2.மத்திய மந்திரிசபை  பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கையை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகம்

1.உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் (புகை இல்லாத ரயில்), ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் நடைபெற்ற “Berlin InnoTrans Trade Show” எனும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ரயிலை பிரான்ஸின் ALstom நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த ரயிலுக்கு ‘Hydrail” என பெயரிடப்பட்டுள்ளது.இந்த ரயில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனது சேவையை தொடங்கும். மேலும்  இந்த ரயில் மணிக்கு 140Kmph வேகத்தில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நவீன ரயில் ஜெர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தில் தான் பயன்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2.‘ஜிம் யோங் கிம்’ உலக வங்கியின் தலைவராக  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் அமெரிக்க குடிமகனாவார்.இவரது பதவிக்காலம் ஜூலை 1, 2017-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு உலக வங்கி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
3.உலகில் முதன் முறையாக 3 பேர் மரபணுவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஜோர்டானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்துள்ளது.இதனால் ஆண் குழந்தையின் தாய், தந்தை, கரு தானம் செய்தவர்  ஆகிய மூவரும் அந்த முயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.அமெரிக்க டாக்டர்கள் குழு இந்த முயற்சியில் ஈடுபட்டது.டாக்டர்கள் குழு மெக்சிகோவுக்கு சம்பந்தப்பட்டவர்களை வரவழைத்து 3 பெற்றோர் இணைந்து உலகில் முதல்முறையாக குழந்தையை உருவாக்கியுள்ளனர்.
4.50 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபா நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக ஜெஃப்ரி டிலாரன்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
5.இன்று உலக இதய தினம்.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் இதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வர்த்தகம் 

1.புது தில்லியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரை அறிமுகம் செய்துள்ளது.

விளையாட்டு

1.பெல்ஜியத்தில் உள்ள டீ ஹான் நகரில் நடைபெற்ற பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில்  இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய பெல்ஜியம் வீரர் நய்டிங் செட்ரிக்கை  15-13, 11-6, 11-2, 17-15 என்ற செட்கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இதற்கு முன்பு இந்தியாவின் அசந்தா சரத் கமல்  2012ம் ஆண்டு பட்டத்தை வென்றுள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

4.இன்று கடலூர் மாவட்டம்.

சோழர் கால வரலாற்று புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.இதன் தெற்கே அரியலூர் மாவட்டமும் தென்கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறை வந்தது. அதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

மேலும் நெய்வேலி நகரமும் இம்மாவட்டத்தில் உள்ளது.என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிருவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது.மாவட்டத்திற்க்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது.மேலும் கரும்பு இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கின்றன.இங்கு பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன.கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு (வெள்ளாறு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.மேலும் திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.