தமிழகம்

1.நடிகர் விணுச்சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார்.


இந்தியா

1.கருப்பு பணத்தை வைத்திருப்போர் அதனை ஒத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தை மே 10 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.ஆஃப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது தாலிபான்கள் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு ஆபரேசன் மன்சூரி (Operation Mansouri – Spring Offensive ) என பெயரிட்டுள்ளனர்.


இன்றைய தினம்

1.இன்று உலக கால்நடை தினம் (World Veterinary Day).
உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு (Jim Edward) மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை தினமாகக் கொண்டாடி வருகிறது.
2.சர்வதேச நடன தினம் (International Dance Day).>
சர்வதேச நடனக் கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறது. ஏப்ரல் 29 அன்றுதான் ஜூன் ஜார்ஜ்ஸ் நோவீர் (Jean – Georges Noverre) என்ற நடனக் கலைஞர் பிறந்த நாளாகும். நடனத்தின் மூலம் பாலியல் வேறுபாட்டைப் போக்கி சமத்துவத்தைக் கொடுக்கலாம் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது.
3.இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம் (World Day of Remembrance for all Victims of Chemical Warface).
இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது. சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். இரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997இல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
4.இன்று இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 29 ஏப்ரல் 1848.

 

– தென்னகம்.காம் செய்தி குழு