current3

தமிழகம்

1.சென்னை ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500 நோட்டுகள் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டன.

இந்தியா

1.இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா 5 நாள் அரசு முறை பயணமாக  கடந்த நவம்பர் 26-ம் தேதி இலங்கை சென்றுள்ளார்.
2.ஆந்திர அரசு பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு AP Purse எனும் அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தலாம்.இந்த செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு  தெரிவித்துள்ளார்.
3.கணக்கில் காட்டாத பணத்துக்கு 10 சதவீதம் அபராதம் மற்றும் 75 சதவீத வரி விதிக்கும் வைகையிலான புதிய சட்டதிருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது.
4.ரயில்வே முன்பதிவு படிவத்தில் ஆண், பெண் பாலினத்தை தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர் என்று திருநங்கைகள் குறிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் திருநங்கைகளுக்கான மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிட ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கான படிவத்தில்  இடம் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5.டிசம்பர் 31 ம் தேதி முதல் இந்தியாவின் முதல்  பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாக கோவா மாநிலம் மாறவுள்ளதாக கோவா மாநில தலைமைச்செயலாளர் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார்.

உலகம்

1.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி உள்ளிட்ட விவசாயப் பொருள்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக இஸ்லாமாபாதில் இருந்து வெளிவரும் “தி டான்’ நாளிதழில் தெரிவித்துள்ளது.
2.மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் எரியூட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது அஸ்தி மண்ணில் புதைக்கும் இறுதிச் சடங்கு, அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது.மேலும் நாடு முழுவதும் 9 நாள் துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
3.பணப்பற்றாக்குறையால் திண்டாடிவரும் ஜிம்பாப்வே அமெரிக்க டாலர்களுக்கு நிகராக பாண்டு நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டு

1.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற நான்கு நாடுகள் இடையிலான ஹாக்கிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது.3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.
2.குரோஷியா தலைநகர் ஸாகிரெபில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி குரோஷியாவை 3 – 2 என்ற போட்டி கணக்கில் வென்று முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது.முன்னதாக நான்கு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோற்றிருந்த அர்ஜென்டினா முதல் முறையாக டேவிஸ் கோப்பையை  வென்றுள்ளது.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் (International Day of Solidarity With the Palestinian People Day).
அமைதி திரும்பாமல் தொடர்ந்து கலவரம் நடக்கும் ஒரே நாடு பாலஸ்தீனம்தான். ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சினை தீர்க்க முடியாமல் போனது. பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
2.இன்று பாக்கித்தானியத் துடுப்பாளர் யூனுஸ் கான் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 29 நவம்பர் 1977.
3.இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 29 நவம்பர் 1908.
4.அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்திய நாள் 29 நவம்பர் 2006.
5.பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்த நாள் 29 நவம்பர் 1947.