current2

இந்தியா

1.இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு நாள். இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று (ஆகஸ்டு 29) கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.  2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது.
2.ஆகஸ்டு  31-ஆம் தேதி முதல் ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது.ரயில்கள் விபத்து நேரிடும்போது,பயணிகள் உயிரிழந்தாலோ,பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகளின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
3.இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம்,பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உலகம்

1.இன்று சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்.(International Day Against Nuclear Test).

அணு ஆயுதம் முதன்முதலாக 1945ஆம் ஆண்டில் வீசப்பட்டது. அதன் பிறகு இதுவரை 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் கதிரியக்கமும், சுற்றுச்சூழலும், நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இன்றைக்குள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள் பற்றியும் அதன் பரவலைத் தடுக்க ஐ.நா. சார்பில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று அமெரிக்கப் பாடகர் மைக்கல் ஜாக்சன் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 29 ஆகஸ்டு 1958.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்,ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராய் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேல் ரத்னா விருது வழங்கினார்.நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர் மால் தயாள் (குத்துச்சண்டை), ராஜ்குமார் சர்மா (கிரிக்கெட்), விஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்), பிரதீப் குமார் (நீச்சல்), மகாவீர் சிங் (மல்யுத்தம்). ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி துரோணாசார்யா விருது வழங்கினார்.ரஜத் செளகான் (வில்வித்தை), லலிதா பாபர் (தடகளம்), செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர்), சிவ தாபா (குத்துச்சண்டை), அஜிங்க்ய ரஹானே (கிரிக்கெட்), சுப்ரதா பால் (கால்பந்து), ராணி ராம்பால் (ஹாக்கி), ரகுநாத் (ஹாக்கி), குருபிரீத் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), அபூர்வி சண்டீலா (துப்பாக்கிச் சுடுதல்), செளம்யஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித் குமார் (மல்யுத்தம்), சந்தீப் சிங் மான் (பாரா தடகளம்), வீரேந்திர சிங் (மாற்றுத்திறனாளி மல்யுத்தம்). ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அர்ஜுனா விருது வழங்கினார்.சேத்தி கீதா (தடகளம்), சில்வனாஸ் டங் டங் (ஹாக்கி), ராஜேந்திர பிரால்ஹத் (படகுப் போட்டி). ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தியான் சந்த் விருது வழங்கினார்.தேசிய விளையாட்டு தினமான இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.