current-affairs

தமிழகம்

1.உணவுப் பாதுகாப்புச்சட்டம் நவம்பர் 1ம் தேதி முதல் அமலாகும் என தமிழக அர‌சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி‌க்‌கப்பட்டுள்ளது.மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் பொது விநியோகத்திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இந்தியா

1.மத்திய அரசின் ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும்  பி.இ.எம்.எல்., நிறுவனத்திற்கு உயர்ந்த விருதான டாப் சேலஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை பி.இ.எம்.எல். நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான தீபக்குமார் ஹொடாவிடம் பெல்ஜியம் நேஷ்னல் ஜெனரல் பீட்டர் வழங்கியுள்ளார்.
2.ஐதராபாத்தில் நடந்த உலக பக்கவாத விழிப்புணர்வு மாநாட்டில் பக்கவாத விழிப்புணர்வு இந்திய தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.கோவா மாநில முதல் பெண் முதல்வரான சசிகலாக கோத்கர் நேற்று மரணமடைந்துள்ளார்.

உலகம்

1.வங்க கடலில் விசாகப்பட்டினம் அருகில் உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என பெயர் வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.இந்த பெயரை சூட்டியது மியான்மர் நாடாகும்.

விளையாட்டு

1.சேலத்தில் நடந்து முடிந்த மாவட்டங்களுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் சென்னை டான் பாஸ்கோ பள்ளி மாணவர் கான்ஸ்டான்டின் ஆஷ்லே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2.செகந்திராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான முதியோருக்கான நீச்சல் போட்டியில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தாராம் (63) தங்க பதக்கம் வென்றுள்ளார்.