current-affairs

தமிழ்நாடு

 1. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார்.
 2.  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்குகள் ஒரே மாதத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றன. ராகவி ( 7) என்ற பெண் சிங்கவால் குரங்கும், ரவி (9) என்ற ஆண் சிங்கவால் குரங்கும் இணை சேர்ந்து மார்ச் 26-ஆம் தேதி குட்டி ஒன்றினை ஈன்றது

கூடுதல் தகவல்

 • ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ முதல் ஜி வரையிலான 7 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள்களான இவற்றின் வாயிலாக, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த தன்னிறைவை அடைந்துள்ளது. 
 • ரஷ்யாவின் GLONASS, சீனா வின் BeiDou, ஐரோப்பாவில் GALILEO என சில இடங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை, ஐஆர்என்எஸ்எஸ்-1ஜியின் வெற்றியின் மூலம் நமக்கும் சொந்தமாகியுள்ளது.
 •  நாட்டின் பிரத்யேக செயற்கைக்கோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ். 
  (Standard Positioning System), செல்லிடப்பேசியில் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 • சிங்கத்தின் வாலின் நுனியில் கொத்தாக முடியிருப்பது போல், இந்த குரங்குகளுக்கு வால் இருப்பதால் சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது.
 • குரங்குகள் பெரும்பாலும் சோலைக் காடுகளில் காணப்படுவதால் சோலை மந்தி என்றும் அழைக்கப்படுகின்றன. சிங்கத்தின் பிடரியை ஒத்த முகம் மற்றும் வால், கருமை நிற உடல், வெளிறிய பிடரி ஆகியவற்றால் பெரும்பான்மை பார்வையாளர்களைக் கவரும் இவ்வுயிரினம் அரிதான மற்றும் அழிந்து வரும் ஒரு உயிரினமாகும். 
 • பசுமை மாறாக் காடுகளில் உலகிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டும் இந்தக் குரங்குகள் காணப்படுகின்றன.
 • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வால்பாறை சோலைக் காடுகளிலிருந்து 1990-ஆம் ஆண்டு ஒரு ஆண் குரங்கும் மூன்று பெண் குரங்குகளும், 1999-ஆம் ஆண்டு ஒரு பெண் குரங்கும் கொண்டு வரப்பட்டன.
 • இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் (ஐடிபிபி) வடகிழக்குப் பிராந்திய தலைமையகத்தை, மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து அருணாசலப் பிரதேசத் தலைநகர் இட்டா நகருக்கு மாற்றத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.
 • நிகழாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை முதல் கட்டமாக மே 1, இரண்டாம் கட்டமாக ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது. 
 • ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனியாக அந்த மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலால் தொடங்கப்பட்ட ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சி மீண்டும் காங்கிரஸுடன் ஐக்கியமானது.
 • தென்இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி சித்தராமையா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.
 •  ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி எஸ்.கே.பகத் நியமிக்கப்பட்டார்.
 • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை பகல் 12.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி 33 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது
 • பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, பஞ்சாப் மாநிலத்துக்குள்பட்ட இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள “லேசர் சுவர்கள்’ செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
 • 2016-ம் ஆண்டுக்கான 9-வது மாஸ்கோ மணல் சிற்ப போட்டி ஏப்ரல் 21 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
 • நியூசிலாந்தின் ஒருநாள், டி20 கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக உள்ள கேன் வில்லியம்சன், அடுத்ததாக டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஆபாச இணையதளங்கள் பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியில் மத்திய உள்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. தன் மீது ஆலோசனை செய்ய இரு குழுக்களையும் அமைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.குழு மத்திய சட்டத்துறையின் முன்னாள் சட்டத்துறை செயலாளரான டி.கே.விஸ்வநாதன் தலைமையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 • ஐ.நா. பல்கலைக்கழக கவுன்சிலுக்கு புதிதாக இந்திய பெண் டெல்லியைச் சேர்ந்த சிந்தனையாளர் அமைப்பான, டெல்லி கொள்கைக் குழுவின் இயக்குநரும் கல்வியாளருமான ராதா குமார் (63) உட்பட 12 பேர் இந்தக் கவுன்சிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • டிஎன்ஏ (மரபணு) வடிவமைப்பை பயன்படுத்தி உலகின் மிக நுண்ணிய தெர்மாமீட்டரை (வெப்பமானியை) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
 • இந்தியாவிலேயெ முதல்முறையாக கன்ன்னூர் சிறையில் சிறை மியூசியம் அமைக்கப் பட்டுள்ளது.