இந்தியா

1.இந்திய ரயில்வே 18 நவீன ரக டீசல் என்ஜின்களை மியான்மருக்கு ஏற்றுமதி செய்ய  உள்ளது.இவற்றின் மதிப்பு ரூ.200 கோடியாகும்.இந்த ரயில் என்ஜின்கள் அனைத்தும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ரயில் என்ஜின் தயாரிப்பு மையத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
2.அசாமின் தோலா- சதியா இடையே 9.15 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி கடந்த மே 26-ஆம் தேதி திறந்து வைத்தார்.இது நாட்டிலேயே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலம் ஆகும்.இந்த பாலம் அருணாசலப்பிரதேசத்தை அசாம் மாநிலத்துடன் இணைக்கிறது.
3.வறட்சியை சமாளிக்க நாட்டிலேயே முதல் முறையாக மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


உலகம்

1.சிங்கப்பூரில் ஒரு வாரம் நடைபெற்ற இந்திய – சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி கடந்த 24-ஆம் தேதி நிறைவடைந்தது.இந்தக் கூட்டுப் பயிற்சி சிங்கப்பூரின் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா – சாங்கி கடற்படைத் தளத்திலும், தென் சீனக் கடல் பகுதியிலும் நடைபெற்றது.


வர்த்தகம் : 

1.விஸ்டாரா நிறுவனத்தின் விமான சேவையில் முதலாவது ஏ320நியோ ரக விமானம் கடந்த மே 24-ஆம் தேதி இணைத்துக் கொள்ளப்பட்டது.


இன்றைய தினம்

1.பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாள் 28 மே 1964.

 

– தென்னகம்.காம் செய்தி குழு