Current-Affairs-Updates

தமிழகம்

1.கடந்த 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன்  முடிவடைகிறது.

இந்தியா

1.இன்று பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதியான என்.டி. ராமராவ் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 28 மே 1923.
2.தமிழ் நாட்டில் உள்ள மலையாளிக்கவுண்டர்,நரிக்குறவர் குருவிக்காரர் மற்றும் புதுச்சேரியின் இருளர் ஜாதிகளை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.நாடாளுமன்றத்தில் இதுபற்றிய மசோதா நிறைவேறியபின்,ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று,அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்த பின்பு இது அமலுக்கு வரும்.

விளையாட்டு

1.அமெரிக்காவில் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி’யில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிகர் சாய்ரெட்டி ஜங்கா (வயது 11),நியூயார்க் நகரை சேர்ந்த ஜெய்ராம் ஜெகதீஸ் ஹத்வார் (13)  சாம்பியன் பட்டம் வென்றனர். இவர்கள் இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.