இந்தியா

1.கேரளா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஏ.கே. சசீந்திரன் பெண்ணிடம் முறைகேடாக பேசியது தொடர்பான ஒலி நாடா வெளியானதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


வர்த்தகம்

1.கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கிக்கு (கேவிபி) சிறந்த சிறிய வங்கிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கேபிஎம்ஜி, பிசினஸ் டுடே, ஐசிஐசி வங்கி இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.


உலகம்

1.ஆசியாவில் உள்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்படுள்ளது.இதில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தை வியட்நாம் பிடித்துள்ளது.இந்தியா மூன்றாவது இடத்தையும்,இந்தோனேசியா நான்காவது இடத்தையும்,மியான்மர் ஐந்தாவது இடத்தையும்,சிங்கப்பூர் ஆறாவது இடத்தையும்,பிலிப்பைன்ஸ் ஏழாவது இடத்தையும்,மலேசியா எட்டாவது இடத்தையும்,தாய்லாந்து ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய காற்றுடன் “டெபி” புயல் தாக்க உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.தரம்சாலாவில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இந்திய பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.


இன்றைய தினம்

1.இன்று தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்.இவர் இறந்த தேதி 28 மார்ச் 1943.
2.இன்று தமிழக கர்நாடக இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 28 மார்ச் 1919.

 

– தென்னகம்.காம் செய்தி குழு