இந்தியா

1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான  குர்ஷீத் ஏ கனாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜம்மு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோஹ்ரா பிறப்பித்துள்ளார்.
2.கேரள மாநில கவர்னராகவும், ஆந்திரபிரதேச ஐகோர்ட்டு நீதிபதியாகவும் பதவி வகித்த முன்னாள் மத்திய மந்திரி சிவசங்கர் (90) நேற்று காலமானார்.
3.கடந்த 57 ஆண்டுகளாக இந்தியக் கடற்படையில் சேவையாற்றிய இந்தியப் போர்க் கப்பலான ஐ.என்.எஸ் விராட்  அடுத்த வாரத்துடன் ஓய்வு பெறுகிறது.இந்த கப்பல் 1959-ம் ஆண்டு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
4.உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான ஐந்தாம் கட்ட தேர்தலில் 52 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றும் லைவ் வீடியோவில் கூட 20 நொடி விளம்பர இடைவேளை வரும் என்று பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னாவை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவருடனான இந்தியத் தூதரின் முதல் சந்திப்பு  இதுவாகும்.


விளையாட்டு

1.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வரும் உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலம் பதக்கம் வென்றார்.இவர் அரையிறுதி போட்டியில் டைபிரேக்கர் முறையில் சீனாவின் டேன் ஜாங்கியிடம் தோல்வியடைந்தார்.எனவே வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.


சிறப்பு செய்திகள்

1.ஆஸ்கர் விருதுகள் 2017 பரிசு வென்றவர்களின் பட்டியல்

01) சிறந்த திரைப்படத்துக்கான விருது — மூன் லைட்.
02) சிறந்த இயக்குநருக்கான விருது — டேமியன் சாசெல் ( லா லா லாண்ட் என்ற திரைப்படத்தின் இயக்குனர் ).
03) சிறந்த நடிகருக்கான விருது — கேசே அப்லிக் ( மான்செஸ்டர் பை தி சீ என்ற படத்தில் நடித்தற்காக ).
04) சிறந்த நடிகைக்கான விருது — எம்மா ஸ்டோன் ( மூன் லைட் என்ற படத்தில் நடித்தற்காக ).
05) சிறந்த துணை நடிகருக்கான விருது — மகர்ஷா அலி ( மூன் லைட் என்ற படத்தில் நடித்தற்காக ).
இவர் ஆஸ்கார் விருது பெற்ற முதல் இஸ்லாமியர் எனும் சிறப்பைப் பெற்றார்.
06) சிறந்த துணை நடிகைக்கான விருது — வயோஹா டேவிஸ் ( பென்செஸ் என்ற படத்தில் நடித்தற்காக ).
07) சிறந்த பாடல் — லா லா லாண்ட் படத்தின் ” சிட்டி ஆப் ஸ்டார்ஸ் ‘ தேர்வு செய்யப்பட்டது. இதை ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாசேக், ஜஸ்டின் பால் எழுதியிருந்தனர்.
08) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது — ஜஸ்டின் ஹர்விட்ஸ் ( லா லா லாண்ட் படம் ).
09) சிறந்த ஒளிப்பதிவாளர் விருது — லினஸ் சான்ட்கிரென் ( லா லா லாண்ட் படம் ).
10) சிறந்த எடிட்டருக்கான விருது — ஜான் கில்பர்ட் ( ஹேக்சா ரிட்ஜ் படம் ).
11) சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது ‘தி சேல்ஸ் மேன் – The Salesman’ என்ற ஈரான் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. ( இயக்குனர் – அஸ்கார் பர்ஹாதி ).
12) சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது ‘ஜூத்தோப்பியா – Zootopia’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
13) ‘சூசைட் ஸ்குவாட் – Suicide Squad’ என்ற திரைப்படத்திற்காக கேட் மெக்கென்னன் மற்றும் ஜேசன் பேட்மேன் ஆகிய இருவருக்கும் சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது.
14) சிறந்த முழுநீள ஆவணப்படமாக எஸ்ரா எடில்மான் மற்றும் கரோலின் வாட்டர் லோ நடித்த “மேட் இன் அமெரிக்கா” தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
15) “பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ பைன்ட் தெம்” படத்தில் பணியாற்றிய கோலின் அட்வூட்டுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கா ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
16) “அரைவல்” படத்தில் பணியாற்றிய சில்வியன் பெல்லிமாருக்கு சிறந்த சவுண்ட் எடிட்டருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
17) சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது.
18) சிறந்த ஆவண குறும்படம் — ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா.


இன்றைய தினம்

1.இன்று தேசிய அறிவியல் தினம்.
தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 – ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. 2013-ம் ஆண்டிற்காக, “மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உணவு பாதுகாப்பும்” (Genetically Modified Crops and Food Security) குறித்த கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.
இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
2.ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்த நாள் 28 பிப்ரவரி 1784.
3.ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 1854.
4.வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 1935.

 

– தென்னகம்.காம் செய்தி குழு