தமிழகம்

1.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விழுப்புரம் மாவட்டம், கந்தலவாடி கிராமத்தை டிஜிட்டல் கிராமமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்தியா

1.கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள், சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தொடர்பு ஏற்படுத்துவதற்காக 10588 என்ற இலவச தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இந்த வசதி தற்போது 13 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் பயனாளிகள் பேச முடியும்.குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 புதிய பிராந்திய மொழிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
2.பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவில் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
3.பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திராவில் சேவல் சண்டை பந்தயத்துக்கு தடை விதித்து ஐதராபாத் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் ஜனவரி 01 / 2017 முதல் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை அமலுக்கு வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
5.விலங்குகள் நல அமைப்பான PETA [ People for the Ethical Treatment of Animals ] 2016ம் ஆண்டுக்கான சிறந்த நபர் விருதை ( Person of the year Award ) பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு வழங்கியுள்ளது


உலகம்

1.மேற்கு பசுபிக் கடல் பகுதியில் சீனாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பலான லிவெளனிங் ( Liaoning ) நீலக்கடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
2.பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தை நோக் – டென் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது.
3.முன்னாள் இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகே(83), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார்.
4.பாகிஸ்தானில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டான 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை  தடை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது.ஆனால் 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை  தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என அந்நாட்டு நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றன.இதில் குஜராத்- ஒடிசா அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.இதில் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சமித் கோஹெல் 359 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உலக சாதனை புரிந்துள்ளார்.உலகில் முதல்நிலைப் போட்டிகளில், தொடக்க  ஆட்டக்காரர் ஒருவரின் அதிகப்பட்ச ரன் இதுவேயாகும்.இதன்மூலம் அவர்  117 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.மேலும் உலக அளவில், முதல் நிலைப் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
2.சீனாவில் லஞ்சம் வாங்கிய வழக்கில் விளையாட்டுத் துறை துணை மந்திரி ஜியாவோ டியான்க்கு கோர்ட்டு 10½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது.
3.ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி பந்து வீச்சில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு பந்து வீச  ஐ.சி.சி.  ஓராண்டு தடை விதித்துள்ளது.
4.அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வழங்கும் 2016ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை Jeje Lalpekhlua பெற்றுள்ளார்.
5.ஜப்பானில் நடைபெற்ற Asian Luge Championship போட்டியில் இந்தியாவின் சிவா கேசவன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.


இன்றைய தினம்

1. லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம்  திறந்துவைக்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 1065.
2.கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்த நாள் 28 டிசம்பர் 1612.
3.இன்று தெற்கு சூடானில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு