current-affairs

தமிழகம்

1.தேசிய அளவில், பிளாஸ்டிக், ‘ஆதார்’ அட்டைகளை, அதிக அளவில் அச்சிட்டு வழங்கியதில், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.ஆசியாவின் நோபல் பரிசு என்று புகழப்படும் ராமன் மகசேசே விருதுக்கு சென்னையை சேர்ந்த கர்நாடக பாடகர் உள்பட இரண்டு இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்க்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராடிய சமூக சேவகர் பெஜவாடா வில்சன் மற்றும் சென்னையை சேர்ந்த கர்நாடக பாடகர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் இந்த ஆண்டுக்கான ராமன் மகசேசே விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ம் ஆண்டுமுதல் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது.
2.ஆசியாவிலேயே மிக அதிக வயதுடைய யானை (86 வயது) என்ற பெருமையை கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாக்ஷாயணி என்ற கோயில் யானை பெற்றுள்ளது.இந்த யானையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கவும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் விண்ணப்பித்துள்ளது.

உலகம்

1.முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்த நாள் 28 ஜூலை 1914. 2.பெரு விடுதலை அடைந்த நாள் 28 ஜூலை 1821. 3.இன்று உலகக் கல்லீரல் அழற்சி நாள்(World Hepatities Day).கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைடிஸ் A வைரஸால் 1.5 மில்லியன், ஹெபடைடிஸ் B வைரஸால் 2 பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 4.இன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்(World Nature Conservation Day).உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்க்கு பதிலாக மாற்று வீரராக பர்வீன் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார்.
2.ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள்  தரவரிசையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் அஸ்வின்.