இந்தியா

1.இந்தூர் நகரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் , இந்தியாவிலேயே முதலாவதாக இயந்திர மனிதன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2.இந்தியாவிலேயே முதன்முறையாக மும்பையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தாஜ் பேலஸ் ஹோட்டல் தனது கட்டிட அமைப்பிற்கு வணிக முத்திரை பெற்றுள்ளது.
3.The Emergency – Indian Democracy’s Darkest Hour என்ற புத்தகத்தை பிரசார் பாரதி தலைவர் சூர்ய பிரகாஷ் எழுதியுள்ளார்.
4.1967ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் சட்டம் வடிவமைக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, 8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது.இனி பாஸ்போர்ட்கள் இந்தியில் மட்டுமில்லாமல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ஐ.நா. சபை சார்பிலான TIR(Transports Internationaux Routiers) அமைப்பில் 71 வது நாடாக இந்தியா இணைந்துள்ளது .
2.எஸ்டோனியா நாடு உலகின் முதல் தரவு தூதரகத்தை(World’s First Data Embassy) லக்ஸம்பர்கில் அமைத்துள்ளது.


இன்றைய தினம்

1.1894 – அமெரிக்கத் தொழிலாளர் நாள் அமெரிக்காவில் அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டது