current-affairs

தமிழகம்

1.புதுச்சேரியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ரிஷிகேஷ் 200 நாடுகளின் தேசியக் கொடிகளை பார்த்து அந்த நாடுகளின் பெயர்களை 1.39 நிமிடங்களில் சொல்லி சாதனைப் படைத்துள்ளான்.இதே போல் சிறுவன் ரிஷிகேஷ் 43 விநாடிகளில் 100யிலிருந்து1 வரை தலைகீழாக கூறி மற்றொரு சாதனையும் நிகழ்த்தினான்.
2.சென்னை மற்றும் கோவை முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தில்  இடம்பெற்ற இரண்டு நகரங்கள் ஆகும்.

இந்தியா

1.ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக என்.எஸ்.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஹெச்.ஆர்.கானின் பதவி காலம் வரும் ஜூலை 3-ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.இதனால் ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்து அமைச்சவரை நியமனக் குழு அறிவித்துள்ளது.கே.சி. சக்ரபர்தி, ஸுபிர் கொகர்ன், ஆனந்த் சின்ஹா மற்றும் எச் ஆர் கான் ஆகிய  நான்கு துணை ஆளுநர்கள் தற்போது உள்ளனர்.
2.பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி டிரைவர் மற்றும் உபேர் இந்தியா கால் டாக்சி நிறுவனத்தின் முதல் பெண் டிரைவருமான பாரதி மரணம் அடைந்தார்.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
3.இன்று இந்தியாவின் 9-வது பிரதமர் நரசிம்ம ராவ் பிறந்த தினம்  28 ஜூன் 1921.

உலகம்

1.வடகொரியா சியோலை கைப்பற்றிய நாள் 28 ஜூன் 1950.