இந்தியா

1.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிகில் பவார்க்கும்,ஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த யூனிகா போக்ரனைம் கேரள மாநிலம், கோவளம் பகுதியையொட்டிய கடலுக்கு அடியில் கடந்த  ஜனவரி 26-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.நிகில் பவார் கோவளத்தில் கடலில் மூழ்கி எழுபவராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
2.இந்திய கடற்படையின் வருடாந்திர தயார்நிலை பயிற்சி TROPEX – 2017 ஜனவரி 24ல் அரபிக்கடல் பகுதியில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் INS விக்ரமாதித்யா , INS சென்னை, அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் INS சக்ரா ஆகியவை ஈடுபட்டுள்ளன.இவைகளுடன் இணைந்து ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
3.கர்நாடக லோக் ஆயுக்தா புதிய நீதிபதியாக பி.விஸ்வநாத் ஷெட்டியை நியமிக்க கவர்னர் வஜுபாய் வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
4.ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டிற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சி 25 கிரையோஜெனிக் என்ஜின் சோதனை கடந்த ஜனவரி 25-ம்  தேதி நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) உள்நாட்டிலேயே இந்த என்ஜினை தயாரித்தது.இந்த சோதனை கன்னியாகுமரி மாவட்டம் தேவளை வட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்டது.
5.ராணுவ வீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு வாட்ஸ் ஆப் (+91 9643300008) எண்ணை ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
6.வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வரும் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்ப இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.உத்திர பிரதேசம், பஞ்சாப், மேகாலயா, உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில தேர்தல்கள் வருவதையொட்டி தேர்தல் கமிஷன் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.முன்னதாக பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒலிபரப்பு தொடர்வதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய தேர்தல் கமிஷனை மத்திய அரசு கேட்டிருந்தது குற்பிப்பிடத்தக்கது.


உலகம்

1.ஜப்பான் முதன்முறையாக ராணுவ பயன்பாட்டுக்காக Kirameki – 2 என்ற செயற்கைகோளை , H -2A ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது.
2.ஆஸ்திரேலியா நாட்டின் 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.மருத்துவ துறையில் சிறப்பான சேவை ஆற்றியமைக்காக புருஷோத்தம் சவ்ரிக்கார், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பிற துறைகளில் சிறப்பாக சேவை செய்துள்ள மக்கான் சிங், அணு மருத்துவ நிபுணரும், சிட்னி நகர தமிழ்ச் சங்க தலைவருமான விஜய குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
3.இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும், தங்கி இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றவும் அதிகாரம் அளிக்கும் புதிய உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.மேலும் அமெரிக்க ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் மாட்டிஸ் நேற்று பதவி ஏற்று கொண்டார்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூ வடே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்த அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய அணி வருகிற 30-ந்தேதி நியூசிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.இந்த தொடருக்கு மேத்யூ வடே  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 28 ஜனவரி 1882.
2.ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கி முதல் நாடான நாள் 28 ஜனவரி 1935.

 

– தென்னகம்.காம் செய்தி குழு