இந்தியா

1.ஆசியாவின் மிகப்பெரிய சர்ச்சான சுமி பாப்டிஸ்ட் தேவாலயம் நாகாலாந்தின் ஸுந்ஹிபோடோ நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது.இந்த தேவாலயம் கட்டுவதற்காக ரூ.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 203 அடி நீளம், 153 அடி அகலம், 166 அடி உயரம் கொண்டதாகும்.
2.மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய பல்கலைக்கழகம் உத்திரபிரதேசத்தில் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
3.ஜம்மு & காஷ்மீர் அரசு Facebook , WhatsApp, Twitter உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்களுக்கு 1 மாதம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.மத்திய ரிசர்வ் காவல் படை ( CRPF ) டைரக்டர் ஜெனரலாக ராஜிவ் ராய் பட்நாகர் IPS மற்றும் இந்தோ திபெத் எல்லை காவல் படை ( ITBP ) டைரக்டர் ஜெனரலாக ரஞ்சித் குமார் பச்நந்தா IPS நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
5.இந்திய, பிரான்ஸ் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் “வருணா பயிற்சி”(Varuna Exercise) மத்திய தரைக்கடலில் நடைபெற்று வருகிறது.


உலகம்

1.நிகரகுவாவில் நடைபெற்ற , இளம் வயதினருக்கான ( 15 – 19 வயது ) பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் சிருஷ்டி கவுர் பட்டத்தை வென்றுள்ளார்.கனடாவின் சமந்தா பியரி 2வது இடத்தையும், மெக்சிகோவின் எரி டிராவா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


விளையாட்டு

1.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் 26 ஆணையங்கள் உள்ளன. இதில் 2017-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் கல்வி ஆணையம் மற்றும் ஒலிம்பிக் சேனல் ஆணையம் ஆகியவற்றின் உறுப்பினராக நீதா அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார்.


இன்றைய தினம்

1.வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள் (World Day for Safety and Health at Work).
வேலைத் தொடர்பான விபத்துகள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா. சபை ஏப்ரல் 28ஐ இத்தினமாக அறிவித்துள்ளது. அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.இன்று ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 28 ஏப்ரல் 1937.
3.மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 28 ஏப்ரல் 1932.
4.கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியான நாள் 28 ஏப்ரல் 2001.

 

– தென்னகம்.காம் செய்தி குழு