current2

இந்தியா

1.சுப்ரிதா தாஸ் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவியின் வாழ்க்கை வரலாற்று நூலை Shadow Fighter : Sarita Devi and Her Extraordinary Journey என்ற பெயரில் எழுதியுள்ளார்.
2.நாடு முழுவதும் Big Bazar மற்றும் Inox Leisure ஆகியவை டெபிட் கார்டு மூலம் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் பணம் வழங்க SBI வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
3. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ராணுவ முகாம்களில் உள்ள வீரர்கள் மாற்றுவதற்கு ICICI வங்கி ராணுவ முகாம்களிலேயே சிறப்பு கவுண்டர்களை ஏற்பாடு செய்துள்ளது.

உலகம்

1.ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்டோனியோ குட்டெரெஸ்ஸை,மாஸ்கோவில்  கடந்த நவம்பர் 24-ம் தேதி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
2.பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடுத்த தலைமை தளபதியாக கமர் ஜாவேத் பாஜ்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.ரஷ்யா பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் ஸீகாலுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.

விளையாட்டு

1.ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்  மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில் சீன தைபே வீராங்கனை டாங் சூ யிங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் இந்தியாவின் பி.வி. சிந்துவை 15-21, 17-21 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2.ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்பர்க்கில் நடைபெற்ற உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சச்சின் சிங், கியூபா வீரர் ஜார்ஜ் கிரினனை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
3.இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஒரு ஆண்டில் 500-க்கு மேல் ரன்களுடன் 50-க்கு மேல் விக்கெட்டுகளும் எடுத்த 7-வது ஆல்-ரவுண்டர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
4.இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் இந்த ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் 70-ஆவது ஆண்டுவிழா வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.அவ்விழாவில் விகாஸ் கிருஷ்ணனுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.செவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள் 28 நவம்பர் 1964.
2.கிழக்குத் திமோர் போர்ச்சுக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்த நாள் 28 நவம்பர் 1975.
3.நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பிய நாள் 28 நவம்பர் 2006.