current-affairs

இந்தியா

1.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஆக்சிஜனை கொண்டு இயங்கும்(ஸ்கிராம்ஜெட் என்ஜின்) ராக்கெட் இயந்திரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இன்று காலை  6 மணியளவில் சோதனை செய்தனர்.
2.உத்தரப் பிரதேச மாநில திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவராக நடிகை ஜெயப்ரதாவை அந்த மாநில அரசு நியமித்துள்ளது.
3.சமீபத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க POCSO  எனப்படும்  இணையவழி புகார் பெட்டிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி புதுடெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார்.
4.அன்னை தெரேசா சர்வதேச திரைப்பட விழா (MTIFF) ஆகஸ்ட் 26,2016-ல் மேற்கு வங்கத்தில் துவங்கியது.இதில் தெரேசா பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 23 சிறந்த வெளிநாட்டு மற்றும் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.இது கொல்கத்தா உயர்மறை அறக்கட்டளை மற்றும் SIGNIS இந்தியா (Indian chapter of World Catholic Association for Communication ) ஆகியோரால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு நடத்தும் நந்தன் மல்டிப்ளெக்ஸ்ஷில் இந்த 4 நாள்  திரைப்பட திருவிழா நடைபெறுகிறது
5.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில்  ஆகஸ்ட்25-26-இல்  நடைபெற்ற  2016-ம் ஆண்டிற்கான சார்க் நிதி அமைச்சர்கள் மாநாட்டில்(SAARC- South Asian Association for Regional Cooperation )  இந்தியா சார்பாக சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.இந்த மாநாட்டில் சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள  ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவுகள், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டன.

விளையாட்டு

1.2016 ஆண்டிற்கான  ஐரோப்பாவின் சிறந்த UEFA- வீரர் விருது ஸ்பானிஸ்ய  கிளப்பின் ரியல் மாட்ரிட் மற்றும் போர்ச்சுக்கல்லின் தேசிய அணிக்காக விளையாடும் போர்த்துகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை இவர் இரண்டாவது முறையாக பெறுகிறார். 2014-ல் இந்த விருதினைப் பெற்றார்.