Daily-Current-Affairs

இந்தியா

1.கருப்புப் பண வழக்குகளை விசாரிக்கும் அமலாக்கத் துறையின் இயக்குநராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம் (KWS) ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. Lutrogale perspicillata (மென்மையான பூசிய நீர்க்கீரி) எனும் நீர்க்கீரி கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் சதுப்பு நிலக் காடுகளில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
3.புதுதில்லியில் பாஜக-வின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுதிய “Andhere se ujale ki aur” என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
4.மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக பிபி. சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலகம்

1.தொழில் நடத்துவதற்கு சாதகமான நாடுகள் வரிசையில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது.உலக வங்கியின் மூலம் இந்த தகவல் வெளிவந்துள்ளது.இந்த ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 190 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.
2. உலக எலும்புருக்கிநோய் தினத்தின் 2016ஆம் ஆண்டின் மையக்கரு “Love Your Bones: Perfect Your Future” ஆகும்.

விளையாட்டு

1.ஜோர்டானில் நடைபெற்ற 2016 FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வட கொரியா அணி, ஜப்பான் அணியை பெனால்டி ஷூட்அவுட் முறையில் 5-4 என்ற புள்ளியில் தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது.மேலும் இக்கோப்பையை 2 முறை வென்ற முதல் அணியாக வட கொரியா மாறியுள்ளது.