இந்தியா

1.நாட்டிலேயே நவீன வசதிகளுடன் கூடிய மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை அதிவேகத்துடன் செல்லக் கூடிய தேஜாஸ் ரயில், தனது முதல் பயணத்தை மும்பையில் இருந்து கோவாவின் கர்மாலி வரை தொடங்கியுள்ளது.


உலகம்

1.ஆசிய நாடுகளிலேயே முதன் முறையாக தைவானில் ஓர் பாலின திருமணத்திற்கு அந்த நாட்டு  உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி 26 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஸ்பெயின் வீரர் இலியன் ஜோர்னெட் சாதனை புரிந்துள்ளார்.இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் அதிவேகமாக ஏறிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
3.உலக சுகாதார அமைப்பின் தலைவராக முதன் முறையாக ஆப்பிரிக்க நாடான எத்தோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் ஆதனாம் கேப்ரியேசஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.வரும் ஜூன் மாதம் இவர் பதவியேற்கவுள்ளார்.
4.கூட்டணிக் கட்சிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேபாளப் பிரதமர் பிரசண்டா (62) தனது பதவியை கடந்த மே 24-ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார்.


விளையாட்டு

1.இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு முதல் முறையாக வெளிநாட்டுப் பயிற்சியாளரான பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டீபன் கோட்டாலோர்டா நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள் 27 மே 1937.

 

– தென்னகம்.காம் செய்தி குழு