இந்தியா

1.புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ,ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.ஆந்திராவில் கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதன் மூலம் பட்டிசீமா அணை மிகக்குறைவான காலத்தில் கட்டி முடிக்கப் பட்ட அணை என்ற பெருமையை பெற்றுள்ளது.
3.புதிதாக மொபைல் எண் இணைப்பு பெறவும், பழைய வாடிக்கையாளர்கள் மொபைல் எண் சேவையை தொடர்ந்து பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இங்கு 71.9 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.இரண்டாவது இடத்தில சீனா  உள்ளது.இங்கு 43.6 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.இங்கு 10 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.நான்காவது இடத்தில ஜப்பான் உள்ளது.இங்கு 9.7 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில்  இந்தியா நான்காவது இடத்தில உள்ளது.
2.நடப்பு நிதி ஆண்டிற்கான வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.நான்காவது இடத்தில் யமாஹாவும், ஐந்தாவது இடத்தில் சுசூகியும் உள்ளன.


உலகம்

1.சிங்கப்பூரில் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 30 வரை வளர் தமிழ் இயக்கம் சார்பில் “தமிழ் மொழி விழா 2017” நடைபெறவுள்ளது.இதன் கருப்பொருள் “தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்” ஆகும்.
2.அமெரிக்க நாடாளுமன்றத்தில் “ட்ரம்ப் கேர்” மருத்துவ காப்பீடு மசோதா கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதாக சபாநாயகர் பால் ரயான் அறிவித்தார்.


இன்றைய தினம்

1.இன்று உலகத் திரையரங்கு  தினம் (World Theater Day).
யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.
2.இன்று விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் செய்த யூரி ககாரின் இறந்த தினம்.இவர் இறந்த தேதி 27 மார்ச் 1968.
3.நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட நாள் 27 மார்ச் 1969.
4.கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்ட நாள் 27 மார்ச் 1970.
5.ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரான நாள் 27 மார்ச் 1993.

 

– தென்னகம்.காம் செய்தி குழு