இந்தியா

1.பிரதமர் நரேந்திரமோடி வானொலியில் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார்.அவர் பேசியதில் முக்கியமாக நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து இந்த ஆண்டு 2700 லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளனர்.எனது நன்றியை விவசாய நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.


உலகம்

1.ஆஸ்கர் விருதுகள் 2017 பரிசு வென்றவர்களின் பட்டியல்

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‛டால்பி’ திரையரங்கில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக  தொடங்கியது.இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு விழா தொடங்கியது. ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.சிறந்த ஆஸ்கர் துணை நடிகர் விருது மஹேசர்லா அலிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார். சிறந்த ஒப்பனைக்கான விருது சூசைடு ஸ்வாடு படம் வென்றுள்ளது.சிறந்த ஆவணப் படம் விருதை ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது. சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருதை சூசைடு ஸ்குவாடு படம் வென்றுள்ளது.சிறந்த இயக்குனர் விருதை டாமின் சாஸெல்லே (லா லா லேண்ட்) பெற்றுள்ளார்.சிறந்த தழுவல் திரைக்கதை விருதை மூன்லைட் | திரைக்கதை: பாரி ஜென்கிங்ஸ், கதை – டாரெல் ஆல்வின் மெக்கிரானி பெற்றுள்ளனர்.சிறந்த திரைக்கதை விருதை மான்செஸ்டர் பை தி ஸீ (கென்னத் லோனர்கன்) பெற்றுள்ளார்.சிறந்த பாடலுக்கான விருது சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லாண்ட்) பெற்றுள்ளது.சிறந்த பின்னணி இசை விருது ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லாண்ட்) பெற்றுள்ளார்.சிறந்த ஒளிப்பதிவு விருதை லா லா லேண்ட் திரைப்படம் வென்றுள்ளது.சிறந்த எடிட்டிங் விருதை ஜான் கில்பர்ட் (ஹாக்‌ஷா ரிட்ஜ்) பெற்றுள்ளார்.கவுரவ ஆஸ்கார் விருதினை நடிகர் ஜாக்கிசான் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹாக்‌ஷா ரிட்ஸ் திரைப்படம்
* சிறந்த குறும்படம் (லைவ் ஆக்‌ஷன் பிரிவு)- சிங்
* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- தி ஜங்கிள் புக்
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு- டேவிட் வாஸ்கோ (படம்: லா லா லேண்ட்)
லா லா லேண்ட் திரைப்படம்
* சிறந்த குறும்படம் (அனிமேஷன் பிரிவு)- பைபர்
* சிறந்த ஒலிக்கலவை- கெவின் ஓ கானெல், ஆண்டி ரைட் (படம்: ஹாக்‌ஷா ரிட்ஜ்)
* சிறந்த ஒலித்தொகுப்பு- சில்வியன் பெல்மேர் (படம்: அரைவல்)
* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்- அலெஸாண்ட்ரோ பெட்ரோலாஸி மற்றும் கியோர்கியோ (படம்: சூசைட் ஸ்குவாட்)
* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம்- தி சேல்ஸ்மேன் (ஈரான்)
தி சேல்ஸ்மேன் திரைப்படம்
* சிறந்த ஆவணப்படம்- ஓ.ஜெ.மேட் இன் அமெரிக்கா
* சிறந்த அனிமேஷன் திரைப்படம்- ஜூடோபியா
ஜூடோபியா படத்தின் ஒரு காட்சி
* சிறந்த ஆடை வடிவமைப்பு- காலின் அட்வுட் (படம்: பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்)
* சிறந்த உறுதுணை நடிகை- வயோலா டேவிஸ் (படம்: பென்சஸ்)
* சிறந்த உறுதுணை நடிகர்- மஹெர்சலா அலி (படம்: மூன்லைட்)


விளையாட்டு

1.6 அணிகள் பங்கேற்ற 5-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.சண்டிகாரில் நேற்றிரவு நடைபெற்ற சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் கலிங்கா லான்செர்ஸ் (ஒடிசா) அணி 4-1 என்ற கோல் கணக்கில் தபாங் மும்பையை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உத்தரபிரதேச விசார்ட்ஸ் அணி 5-4 என்ற கோல் கணக்கில் டெல்லி வேவ்ரைடர்சை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
2.நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை எமி சாட்டர்த்வைட் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் ஒரு போட்டியில் எமி சாட்டர்த்வைட் இந்த சாதனையை புரிந்துள்ளார்.


இன்றைய தினம்

1.ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்ட நாள் 27 பிப்ரவரி 1951.
2.பிரித்தானிய தொழிற்கட்சி அமைக்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 1900.
3.ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 1940.

 

– தென்னகம்.காம் செய்தி குழு