current-affairs

தமிழகம்

1.எம்.ஜி.ஆர் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனை சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது.

இந்தியா

1.திருச்சி என்.ஐ.டி-யின் முதல் பெண் இயக்குநராக மினி ஷாஜி தாமஸ் நியமிக்கப்பட உள்ளார்.இவர் தற்போது தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மையத் தலைவராக பணியாற்றுகிறார்.
2.விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை தொழில் முனைவோரை பால் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு “இபசுஹாட்” என்ற இணைய தளத்தை தொடங்க உள்ளது.
3.கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டம் குனிகல் கிராமத்தை சேர்ந்த 105 வயதான “சாலுமரத” திம்மக்கா 2015ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.சாலுமரத என்றால் ஆலமரம் என பொருளாகும்.
4.இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை அறிந்து கொள்ள ‘முஸ்லிம் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ்’ (Muslim Freedom Fighters) எனும் செயலியை ஹைதராபாதைச் சேர்ந்த மென்பொறியாளரான சையது காலீத் சைபுல்லா வடிவமைத்துள்ளார்.
5.ஹைதராபாத் நகரின் பேகம்பேட் பகுதியில் தெலுங்கானா மாநில முதல்வரின் அதிகாரபூர்வ இல்லம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த இல்லத்திற்கு பிரகதி பவன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

உலகம்

1.கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ (90), நேற்று காலமானார்.இவர் 1959 முதல் 1976ம் ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக பதவி வகித்தார்.
2.செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.‘நாசா’ செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது.அந்த விண்கலத்தின் மூலம் கிடைத்த  தகவலை நாசா வெளியிட்டுள்ளது .

விளையாட்டு

1.ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக மரியம்மா கோஷி பதவியேற்றுள்ளார்.முன்னதாக ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த நரிந்தர் பாந்ரா சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவராக பதவியேற்றுள்ளதால் மரியம்மா கோஷி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று புரூஸ் லீ பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 27 நவம்பர் 1940.
2.27 நவம்பர் 1971-ம் ஆண்டு சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
3.27 நவம்பர் 1975-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர், ஐரிஷ் குடியரசு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
4.27 நவம்பர் 1999-ம் ஆண்டு நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தேர்வு செய்யப்பட்டார்.