இந்தியா

1.இந்திய ராணுவ அகாதெமியின் {(Indian Military Academy (IMA) } புதிய கமாண்டராக லெப்டினென்ட் ஜெனரல் சந்தோஷ் குமார் உபாத்யாய நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள வீலர் தீவில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.இந்த ஏவுகணை 5000 கிலோமீட்டர் வரை உள்ள தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கும் திறன் உடையது.இதற்கு முன்னர் இது போன்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருந்தது. தற்போது அதில்  இந்தியாவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
3.2016ம் ஆண்டுக்கான ஞானபீட விருது ( 52nd Jnanpith Award ) வங்கமொழி எழுத்தாளர் ஷங்கா கோஷ் ( Shankha Ghosh ) அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெரும் 7வது வங்க மொழி எழுத்தாளர் ஆவார்.இவர் 1999ல் சாகித்ய அகாடமி விருதும், 2011ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.
4.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தீனாநாத் பார்கவா (Dinanath Bhargava ) வயது முதிர்வின் காரணமாக காலமானார்.இவர் கையால் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்ட பிரதியில் இடம்பெற்ற சிங்கமுக அசோக சின்னத்தை வடிவமைப்பு செய்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.
5.ஆன்லைன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக கூகுள் இந்தியா நிறுவனத்துடன் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைன் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பயிற்சியை  நாடு முழுவதும் 250 நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500 நபர்களுக்கு ‘மின்னணு எழுத்தறிவு -பாதுகாப்பும் எச்சரிக்கையும்’ என்கிற திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


உலகம்

1.ரஷ்யாவின் சுற்றுலா நகரான சோச்சியிலிருந்து சிரியாவில் உள்ள லடாகியா என்ற ரஷ்ய முகாமை நோக்கிச் சென்ற டியூ-154 ரக ரஷிய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.
2.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து அலெப்போ நகரை சிரிய ராணுவம் மீட்டுள்ளது.இதற்கு ரஷிய அதிபர் புதின் மற்றும் ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
3.பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் இந்த வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்தது.
4.உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் செயற்கை மரம் இலங்கையில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.இந்த மரத்தை நிறுவ,இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் கொழும்புவில் நிறுவப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம் உலகின் மிக உயரமானது என்ற சாதனையை படைத்துள்ளது.
5.பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லே  படகு மூலம் 49 நாட்களில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.இவர் 49 நாட்கள், 3 மணி 7 நிமிடம் மற்றும் 38 வினாடிகளில் உலகை சுற்றி முடித்தார். இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு பிரான்சிஸ் ஜோயன் என்ற பிரெஞ்சுக்காரர் 57 நாட்கள் மற்றும் 13 மணி நேரத்தில் படகில் உலகை சுற்றி வந்தார் தற்போது இந்த சாதனையை தாமஸ் கோவில்லே  முறியடித்துள்ளார்.


விளையாட்டு

1.தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ராணுவ அணி வீரர் சத்யேந்திர சிங் தங்கப் பதக்கத்தை வென்றார்.ராணுவ அணியின் மற்றொரு வீரரான செயின் சிங் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.கடற்படை வீரரான ராகுல் பூனியா வெண்கலப் பதக்கத்தை  வென்றார்.ஜூனியர் ஆடவர் 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் மேற்கு வங்க வீரர் சுபாங்கர் பிரமானிக் தங்கப் பதக்கத்தை வென்றார்.மத்தியப் பிரதேச வீரர் ஹர்ஷித் பின்ஜ்வா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.தமிழக வீரர் சர்வேஷ் ஸ்வரூப் வெண்கலப் பதக்கத்தை  வென்றார்.


இன்றைய தினம்

1.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட நாள் 27 டிசம்பர் 2007.
2.28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 1945.
3.இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 1864.
4.ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 1922.
5.பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்ற நாள் 27 டிசம்பர் 1934.
6.சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கிய நாள் 27 டிசம்பர் 1968.

 

– தென்னகம்.காம் செய்தி குழு