தமிழகம்

1.தமிழகத்தில் முதன் முறையாக, தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, நெல்லை மாவட்டத்தில் அன்புச் சுவர் என்ற புதிய திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.இதற்காக ஆட்சியர் அலுவலக வளாகச் சுவரில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.கடந்த ஜூலை 25 ஆம் தேதி நாட்டின் 14 வது குடியரசு தலைவராக திரு. ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்.இவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
2.பீகார் மாநிலத்தின் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார்.


வர்த்தகம்

1.தேசிய பங்குச்சந்தை (NSE) நிப்டி குறியீடு , ஜூலை 25 அன்று முதன்முறையாக 10,000 என்ற உச்ச கட்டத்தை எட்டியது.


உலகம்

1.தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கி ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஹமாஸ் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
2.ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக பன்முக திறமை கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஷேக் ஹம்தான் விருதை காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது மாணவி ஆரத்ரிகா சிங் ஜம்வால் வென்று சாதனை படைத்துள்ளார்.


விளையாட்டு

1.ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2019 ஆண்டில் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற உள்ளது.2021ம் ஆண்டில் இந்தியாவில் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.2006ல் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டி இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.2015 – இன்று இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் இறந்த தினம்.
2.இன்று வியட்நாம் நாட்டில் தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு