Daily-Current-Affairs

தமிழகம்

1.மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு  தினமான இன்று, ராமேஸ்வரத்தில் அவரது 7 அடி உயர வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.மணிப்பூர் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் இரோம் ஷர்மிளா (44), தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதாக அறிவித்துள்ளார்.இதன்படி, வரும் 9-ஆம் தேதி தனது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
2.பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறார்களை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகையும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.இதேபோல், சிறார்களை பணியில் அமர்த்துவோருக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது.முதன்முறையாக வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்குத் தண்டனை இல்லை என்றும், தொடர்ந்து அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.