இந்தியா

1.சிக்கிம், இமாச்சல், கேரளாவை தொடர்ந்து ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் திட்டத்தின் படி, உத்ரகாண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஊரக பகுதிகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.Power For All திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.


உலகம்

1.கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக , முதன்முறையாக டர்பன் அணிந்த சீக்கிய பெண்மணி பல்பிந்தர் கவுர் ஷெர்கில் (Palbinder Kaur Shergill) நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் முதல் தலைவராக , ரஷ்யாவின் விளாடிமிர் வோரன்கவ் (Vladimir Voronkov) நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணைத்தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த இம்ரான் கவாஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினினிஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
2.1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
3.1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு