தமிழகம்

1.புதுச்சேரியில் 68-வது குடியரசு தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதன்முறையாக தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.


இந்தியா

1.ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து ஜனவரி 25, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, அசோக சக்கர வடிவில் மனித சங்கிலி அமைத்தனர்.
2.கடந்த ஜனவரி 25-ம் தேதி ஏழாவது தேசிய வாக்களர் தினம் கொண்டாடப்பட்டது.இதன் கருப்பொருள் — இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல் [ “ Empowering Young & Future Voters” ] ஆகும்.
3.இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கடாகின் (68), நேற்று தில்லியில் மரணம் அடைந்தார்.இவர் 2009-ஆம் ஆண்டில் இருந்து ரஷ்ய தூதராக பணியாற்றி வருகிறார்.
4.அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசு முறைப் பயணமாக கடந்த ஜனவரி 24-ம் தேதி இந்தியா வந்தார்.மேலும் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப்  பங்கேற்றார்.இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இடையே பயங்கரவாத ஒழிப்பு, ஒருங்கிணைந்த பொருளாதார நடவடிக்கைகள், கடல்வழி போக்குவரத்தில் இணைந்து செயல்படுதல், சாலைப் போக்குவரத்துத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஆள்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை அளித்தல்  உள்ளிட்டவை தொடர்பாக 14 முக்கிய ஒப்பந்தங்கள் கடந்த ஜனவரி 25-ம் தேதி கையெழுத்தாகின.
5.மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
6.பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மேகாலய மாநில ஆளுநர் தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் தனது பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார்.


உலகம்

1.ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.அமெரிக்கப் பத்திரிகை “தி அமெரிக்கன் இன்டரஸ்ட்” வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்து பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தப் பட்டியலில், முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனா மற்றும் ஜப்பான் நாடுகளும் பிடித்துள்ளன. ரஷ்யா  4-ஆவது இடத்தையும், ஜெர்மனி 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.ஈரான் 7 -ஆவது இடத்தையும்,இஸ்ரேல் 8-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
3.சீனா 2000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட , ஆளில்லா போர் விமானம் The Sharp Sword UAV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
4.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வெனிசுலா நாட்டின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவோஸ் பெயரில் அமைந்த , முதலாவது ஹியூகோ சாவோஸ் அமைதி மற்றும் இறையாண்மை பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5.அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் மாபெரும் பாதுகாப்புச் சுவர் எழுப்பும் உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 25-ம் தேதி  கையெழுத்திட்டார்.அதேபோல தகுந்த சான்றுகள் இல்லாமல் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு வந்து, போலி ஆவணங்களுடன் வசித்து வரும் வெளிநாட்டவரை சொந்த நாட்டுக்கு விரைவில் திருப்பி அனுப்பும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் (International Day of Commemeration in Memory of the Victims of the Holocaust).
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் படைகள் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நாஜி மரண முகாமில் இருந்த யூதர்களை விடுவித்தது. இனப்படுகொலை மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா. அமைப்பு இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.
2.விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்ட நாள் 27 ஜனவரி 1924.
3.ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டிய நாள் 27 ஜனவரி 1926.

 

– தென்னகம்.காம் செய்தி குழு