current-affairs

தமிழகம்

1.அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19-ல் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்துள்ளார்.இதற்கான வேட்புமனுக்கள் நேற்று முதல் பெறப்படுகின்றன.
2.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழக முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக  மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்துள்ளார்.மேலும் தமிழக அரசு எந்த விதமான  புதிய திட்டங்களை செயல்படுத்தவும்,புதிய உத்தரவுகளை பிறப்பிக்கவும் உத்தரவிட முடியாது எனவும் அறிவித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ரூ.183 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.107 கோடி அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகும் அறிவித்துள்ளார்.
3.தினத்தந்தி சார்பாக நடைபெறும் சி.பா.ஆதித்தனார்  இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மூத்த தமிழறிஞர் விருதை முனைவர் அருகோவும், சிறந்த நூலுக்கான பரிசை முனைவர் தாயம்மாள் அறவாணனும் பெறுகிறார்கள்.மேலும் அருகோவுக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.பாஸ்கரன் பரிசுகளை வழங்க உள்ளார்.

இந்தியா

1.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட் வெற்றிகரமாக நேற்று  விண்ணில் ஏவப்பட்டது.வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, ‘ஸ்கேட் சாட் 1’  உள்பட 3 இந்திய செயற்கைக்கோள்களும்,அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள் 3, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களும் அடங்கும்.
2.வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் 71-ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றினார்.
3.ஆறுகளை நீர்வழித் தடங்களாக மேம்படுத்துவது குறித்து இந்தியா, தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4.பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் “சத்யா’ எனப்படும் கேரள பாரம்பரிய விருந்து  பரிமாறப்பட்டது.இந்த “சத்யா’ விருந்தில், 15 வகையான பாயசங்கள் உள்பட 100 வகையான உணவுப் பொருள்கள் பரிமாறப்பட்டன.

உலகம்

1.இன்று உலக சுற்றுலா தினம் (World Tourism Day).

பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் உலக சுற்றுலா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு செப்டம்பர் 27ஐ உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இத்தினம் 1980ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் சுற்றுலா துறைகள் அதிகம் லாபம் ஈட்டும் துறையாக மாறியுள்ளன.
2.உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை இங்கிலாந்தில் விடப்பட்ட நாள் 27 செப்டம்பர் 1825
3.ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்த நாள் 27 செப்டம்பர் 1928.
4.கடைசி பாலிப் புலி கொல்லப்பட்ட நாள் 27 செப்டம்பர் 1937.
5.இன்று கூகுளின் பிறந்தநாள்.

இன்று கூகுளின் 18வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது.இந்நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் வகையில், தனது முகப்புப் பக்கத்தில் வண்ண மையமான பலூன்களுடன் சிறப்பு டூடுலை கூகுள் வடிவமைத்துள்ளது.

விளையாட்டு

1.இந்தியா-நியூஸிலாந்து இடையே கான்பூரில் நடைபெற்ற 500வது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஆட்டநாயகன் விருது  ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.
2.இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக அஜய்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

2.இன்று அரியலூர் மாவட்டம்.

அரியலூர் மாவட்டம் ஜனவரியில் 1 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.இம்மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் என மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது.