இந்தியா

1.நாட்டிலேயே முதன் முறையாக, தேசிய பேரிடர் மீட்பு படையினர் , உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து காட்டுத்தீயை ( Forest fire ) அணைப்பது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் உத்தரகாண்ட் அரசு , காட்டுத்தீயை கட்டுப்படுத்த முதன்முறையாக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தவுள்ளது.
2.இந்திய அஞ்சல் துறை சார்பில் ரூ 100 மதிப்பிலான, காபி நறுமணம் கொண்ட அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முன் 2006ல் சந்தனம் , 2007ல் ரோஜா , 2008ல் மல்லிகை மணம் கொண்ட அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
3.Jal marg vikas project ன் மூலம் உருவாக்கப்பட உள்ள தேசிய நீர் வழி பாதை – 1க்கு ( National water way 1) [வாரணாசி முதல் ஹால்டியா வரை 1390 Km] உலக வங்கி 375 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியுள்ளது.


வர்த்தகம்

1.மும்பை பங்குச் சந்தை நேற்று வரலாறு காணாத அளவு முதல் முறையாக 30,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இரவில் 2 கைதிகளுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் 27 ஏப்ரல் 1840.
2.முதலாம் டேவிட் ஸ்காட்லாந்து மன்னனான நாள் 27 ஏப்ரல் 1124.
3.நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்த நாள் 27 ஏப்ரல் 2002.

 

– தென்னகம்.காம் செய்தி குழு