current-affairs

இந்தியா

1.தென் இந்தியாவின் முதல் குழந்தைகள் நீதிமன்றம் மற்றும் இந்தியாவில் 6வது குழந்தைகள் நீதிமன்றம் ஹைதராபாத்தில் உள்ள நம்பல்லி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
2.ரியோ 2016 ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தோல்வி குறித்து ஆராய  அமைக்கப்பட்ட  இந்திய தேசிய குழுவின் துப்பாக்கி சங்க (NRAI) தலைவராக அபினவ் பிந்த்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
3.இந்திய ரயில்வே துறை, அதன் பாரம்பரிய பொருள்களை டிஜிட்டல் மயமாக்கி  அதன் தளங்களில் வெளியிட கூகிளின் உதவியை நாடியுள்ளது. இது பற்றிய உடன்பாடு தேசிய ரயில் அருங்காட்சியகம் மற்றும் Google கலாச்சார நிலையம் (GCI) இடையே கையெழுத்திடப்பட்டது.தற்போது, கூகிள் 100 நிலையங்களில் இலவச Wi-Fi சேவை வழங்குவதில் ரயில்வே துறைக்கு உதவி வருகிறது.GCI என்பது  உலக கலாச்சார பாரம்பரியத்தை ஆன்லைனில் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும்.

உலகம்

1.தாய்லாந்தின் பாங்காக்கில் ஆகஸ்ட் 23-24, 2016-இல் பேரிடர் அபாய குறைப்பு (DRR) பற்றி முதல் ஆசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (எஸ் அண்ட் டி)  மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றினார்.இவர் ஆசிய மண்டலத்திற்கான  ஐ.நா-வால்  நியமிக்கப்பட்ட DRR தலைவர் ஆவார்.
2.சீனா முதன்முறையாக Yongzin என்ற திபெத்திய மொழியில் அமைந்த தேடுபொறி இயந்திரத்தை ( Search Engine ) அறிமுகம் செய்துள்ளது.Yongzin என்றால்   “மாஸ்டர்” அல்லது “ஆசிரியர்” என்று பொருள். இத்தேடுபொறி, சீனாவில் உள்ள அனைத்து முக்கிய திபெத்திய மொழி வலைத்தளங்களுக்கும்  ஒரு பொதுவான  தேடுபொறியாக விளங்க உள்ளது.
3.இன்று மால்டோவா விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 27 ஆகஸ்டு 1991.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில்(ஆகஸ்ட் 21, 2016)  இந்தியாவின்  சார்பில் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் இந்திய தேசியக்கொடியை தாங்கி சென்றவர் ஆவார்.
2.2016 உலகக் கோப்பை கபடிபோட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில்  அக்டோபர் 7 முதல் அக்டோபர்  22 வரை நடைபெற உள்ளது. இதில் உலகெங்கும் உள்ள நாடுகளில் இருந்து 12 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஈரான், போலந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், கொரியா, ஜப்பான் மற்றும் கென்யா. ஆகிய நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.