Current-Affairs-Updates

இந்தியா

1.கேரளாவில் 5 ஆயிரம் உயர்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக்கும்  திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தி தரும் திட்டத்தையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2.பிலிப்பைன்ஸில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான 5வது ஆசியா-பில் சாம்பியன்ஷிப் போட்டியில் மிஸ்டர் ஆசிய ஆண் அழகனாக பெங்களூருவைச் சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணா (25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.பிரபல மருத்துவர் சாரதா மேனனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக ‘அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
4.உத்தரகண்டில் உள்ள உதம் சிங் நகர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இருபது நாட்களில் 8,000 கழிப்பறைகள் உருவாக்கி லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.கட்டுமான பணிகளை மேற்கொண்ட ’Swajal Pariyojna’, சாதனை சான்றிதழை பெற்று கொண்டது.

உலகம்

1.அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி எழுதிய ‛தி செல் அவுட்’ நாவல் 2016ம் ஆண்டு இலக்கியத்துக்கான ‛மேன் புக்கர்’ பரிசை வென்றுள்ளது.இந்த பரிசு இங்கிலாந்தில் வழங்கப்படுகிறது.மேலும் புக்கர் பரிசை வெல்லும் முதல் அமெரிக்கர் இவர் ஆவார்.
2.10,000 கிமீ தூரம் செல்லும் புதிய ஏவுகணையை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ஆர்எஸ்-28 சர்மத் ஏவுகணை என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த ஏவுகணையானது சதன்-2 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.எஸ்எஸ்-18 என்ற ஏவுகணைக்கு மாற்றாக ரஷ்ய ராணுவத்தில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது.
3.இன்று உலக ஆடியோ பாரம்பரிய தினம் (World Day for Audiovisual Heritage).
யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

32.இன்று வேலூர் மாவட்டம்.

19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது.பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில் மற்றும் விவசாயம் முக்கிய அங்கமாகும்.ஆம்பூரிலும், ராணிப்பேட்டையிலும்,வாணியம்பாடியிலும் அதிகளவு ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. ஆம்பூர் பிரியாணி சிறப்பு பெற்றது.ஆற்காடு பிரியாணி சிறப்பு பெற்றது.