தமிழகம்

1.பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்தியா

1.பிரபல சாமியார் சந்திராசாமி சிறுநீரக செயலிழப்பால் டெல்லியில் கடந்த மே 23-ஆம் தேதி காலமானார்.
2.உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த மே 22 முதல் ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் என்னும் திட்டத்தை உத்திரபிரதேச அரசு அமல்படுத்தியுள்ளது.இந்த திட்டத்துக்கு ‘விதிமுறை இல்லையெனில், எரிபொருள் இல்லை’ (No rule, No fuel) என பெயரிட்டுள்ளது.


வர்த்தகம்

1.பேடிஎம் நிறுவனம் பேமென்ட் வங்கியை கடந்த மே 23-ஆம் தேதி முறைப்படி தொடங்கியது.பேடிஎம் பேமெண்ட் வங்கிக்காக ஆரம்ப கட்ட முதலீடாக ரூ.400 கோடி செலவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
2.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விமானத்தில் செல்ல டிக்கெட் விலை ரூ.12 முதல் தொடங்கும் என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.


உலகம்

1.உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டார் 10 விமானம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


இன்றைய தினம்

1.ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்ட நாள் 26 மே 1918.
2.அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பிய நாள் 26 மே 1969.
3.இன்று போலந்து நாட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு